முகப்பு
இந்தியா

ராஜஸ்தான் இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கான எச்சரிக்கை மணி அல்ல: நிதீஷ்குமார்

ராஜஸ்தான் இடைத் தேர்தலில் பாஜக அடைந்த தோல்வி அக்கட்சிக்கான எச்சரிக்கை மணி அல்ல என்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

ராஜஸ்தான் இடைத் தேர்தலில் பாஜக அடைந்த தோல்வி அக்கட்சிக்கான எச்சரிக்கை மணி அல்ல என்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று பிகார் முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்தார்.
அவர் பாட்னாவில் தனது வாராந்திர நிகழ்ச்சியான பொதுமக்கள் சந்திப்பை திங்கள்கிழமை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்துள்ளதை அக்கட்சியான எச்சரிக்கை மணியாகக் கருத முடியாது. இடைத்தேர்தல் முடிவுகளை வைத்து அரசியல் நிலைமையை மதிப்பிடும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும்.
உதாரணமாக, கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் பிகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிககளில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி 32 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 
அதற்கு அடுத்த ஆண்டில் (2010) பிகாôரில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் எங்கல் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு முன் பிகாரில் நடைபெற்ற இடைத் தேர்தல்கள் மாறுபட்ட காட்சியை (தோல்வி) எங்களுக்கு அளித்தன.
குஜராத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்று நான் முன்கூட்டியே கணித்தேன். அப்போது பலரும் அதைக் கேலி செய்தனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்.
பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளது தொடர்பாக கருத்து கூறுமாறு கேட்கிறீர்கள். 
இதற்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தங்கள் கட்சிக்கு 50 இடங்களுக்கு குறையாமல் ஒதுக்க வேண்டும் ஜிதன் ராம் மாஞ்சி கூறியுள்ளதைப் பொறுத்தவரை, ஜனநாயகத்தில் அனைவருக்கும் தாங்கள் விரும்பியதைக் கூற சுதந்திரம் உண்டு என்பதே என் பதில் என்றார் நிதீஷ்குமார்.
பிகாருக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டது
மத்திய பட்ஜெட்டில் வரி வருவாய்ப் பங்கு என்ற அடிப்படையில் பார்த்தால் பிகாருக்கு எதிர்பார்த்ததை விட அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதீஷ்குமார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டில் பிகார் புறக்கணிக்கப்பட்டது என்று கூறுவது சரியாக இருக்காது. வரி வருவாயில் பிகாரின் பங்கு ரூ.76,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எங்களின் எதிர்பார்ப்பு அதைவிடக் குறைவுதான். அதைத் தாண்டி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிகாரில் அணிமாற்றம் (பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கைகோர்த்தது) என்ற முடிவானது மாநிலத்தின் நலனைக் கருதி எடுக்கப்பட்டது. பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து தேவை என்ற கோரிக்கைக்கு மாநில மக்களின் ஆதரவு உள்ளது. இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து பிகார் சட்டப் பேரவையின் இரு அவைகளும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ஆனால் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளது. அரசியல் அணிமாற்றத்தாலேயே அது தானாக நிகழ்ந்து விடாது என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →