இந்தியா

நேரடி வரி வசூல் ரூ.6.95 லட்சம் கோடியாக அதிகரிப்பு

DIN

மத்திய அரசின் நேரடி வரி வசூல், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு ஜனவரி வரையிலான கால அளவில் ரூ.6.95 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2017-18 நிதி ஆண்டின் ஏப்ரல்-ஜனவரி வரையிலான 10 மாத கால அளவில் நாட்டின் நேரடி வரி வசூல் ரூ.6.95 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வசூலான தொகையுடன் ஒப்பிடுகையில் இது 19.3 சதவீதம் அதிகம்.
நடப்பு முழு நிதி ஆண்டுக்கான திருத்திய மதிப்பீட்டு இலக்கான ரூ.10.05 லட்சம் கோடியில் முதல் 10 மாதங்களில் மட்டும் 69.2 சதவீத தொகை வசூலாகியுள்ளது.
நிகர அளவு அடிப்படையில் நிறுவன வரி வசூல் 19.2 சதவீத வளர்ச்சியையும், தனிநபர் வருமான வரி வசூல் 18.6 சதவீத வளர்ச்சியையும் எட்டியுள்ளது. மதிப்பீட்டு கால அளவில் கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு ரூ.1.26 லட்சம் கோடி மதிப்பிலான தொகை திருப்பித் (ரீஃபண்ட்ஸ்) தரப்பட்டுள்ளது என நிதி அமைச்சகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

SCROLL FOR NEXT