இந்தியா

கர்நாடகாவின் 'கம்பளா' போட்டிக்குத் தடையில்லை: உச்ச நீதிமன்றம்! 

DIN

புதுதில்லி: தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போன்ற கர்நாடகாவின் பாரம்பரிய 'கம்பளா' எருமை ஓட்டப் போட்டிக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. 

கர்நாடக மாநிலத்தின் கடற்கரையோர மாவட்டங்களான உடுப்பி, தக்ஷின கன்னடா பகுதிகளில் 'கம்பளா'  எனப்படும் சேற்று வயல்களில் எருமை மாடுகளைப் பூட்டி விவசாயிகள் ஓடவிடும் போட்டி பாரம்பரியமாக நடந்து வருகிறது.

வழக்கமாக நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை கம்பளா போட்டி நடக்கும். இந்த போட்டி நடந்தால், சிறப்பான விளைச்சல் இருக்கும் என்றும், விவசாயிகளின் விளையாட்டாகவும் இந்த போட்டி கருதப்படுகிறது. தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டு என்னும் போட்டி இருப்பது போல கம்பளா அங்கு பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் கம்பளா போட்டிகளின் பொழுது மாடுகள் கொடுமைப்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டி இந்த போட்டிக்கு நீதிமன்றத்தில் 'பீட்டா' அமைப்பு  வழக்கு தொடர்ந்து தடை பெற்றது. இதனையடுத்து கம்பளா போட்டி நடத்த விலங்குகள் வதைச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து கர்நாடக சட்டசபையில் அவசரச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில் அவசரத் சட்டம் காலாவதியாகி விட்டத்தைத் தொடர்ந்து 'கம்பளா' போட்டிகள் நடத்த இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி பீட்டா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுவானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வாலிகர், டி.ஓய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பீட்டா அமைப்பு சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, " கம்பளா போட்டி நடத்த மாநில அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் காலாவதியாகிவிட்டதால், இந்த போட்டிகளுக்கு என எந்தவிதமான சட்டப்பாதுகாப்பும் இல்லை; எனவே கம்பளா போட்டிகளுக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

அதனையடுத்து கர்நாடக மாநில அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், "அவசர சட்டமானது ஒப்புதல் பெற குடியரசு தலைவரிடம் அனுப்பப்பட்டு, காத்திருப்பில் இருக்கிறது என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "கர்நாடகாவில் கம்பளா எருமை ஓட்டப்போட்டி நடத்த இடைக்காலத் தடை ஏதும் விதிக்க முடியாது. இந்த போட்டி அடுத்த ஆண்டும் நடத்தலாம்,வழக்கை மார்ச் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்" என்று உத்தரவிட்டு, பீட்டா அமைப்பின் மனுவை முற்றாக நிராகரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT