முகப்பு
இந்தியா

மக்களுடன் கைகுலுக்க ஆர்வம் காட்டிய ராகுல்

வட கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல் காந்தி, பாதுகாப்பு வளையத்திலிருந்து விலகி மக்களுடன் கைகுலுக்க ஆர்வம் காட்டினார்.

இந்தியா

மக்களுடன் கைகுலுக்க ஆர்வம் காட்டிய ராகுல்

வட கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல் காந்தி, பாதுகாப்பு வளையத்திலிருந்து விலகி மக்களுடன் கைகுலுக்க ஆர்வம் காட்டினார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:13 PM
பகிர்:

வட கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல் காந்தி, பாதுகாப்பு வளையத்திலிருந்து விலகி மக்களுடன் கைகுலுக்க ஆர்வம் காட்டினார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல்காந்திக்கு சிறப்புப் பாதுகாப்புப் படையின் (எஸ்.பி.ஜி.) பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் எளிதாக ராகுல்காந்தியை அணுக இயலாது. ஆனால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக வட கர்நாடகத்தில் பேருந்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வரும் ராகுல்காந்தி, மக்கள் தன்னை பார்க்க காட்டும் ஆர்வத்தை கண்டு உணர்ச்சி வயப்பட்டிருக்கிறார்.

பேருந்தில் அமர்ந்தபடியே மக்களை பார்த்து கையசைத்து தனது வாழ்த்தைத் தெரிவித்து வந்த ராகுல் காந்தி, ஒரு கட்டத்தில் குஷ்டகி, எல்புர்கா உள்ளிட்ட பல இடங்களில் பேருந்தில் இருந்து இறங்கி சிறப்பு பாதுகாப்புப் படையின் வளையத்தில் இருந்து விலகி மக்களிடம் சென்று கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.

ராகுல் காந்தியை நெருங்க சிறப்புப் பாதுகாப்புப் படையினர் தடுத்தபோது, "அவர்களை ஏன் தடுக்கிறீர்கள், என்னிடம் வர அனுமதியுங்கள்' என்று கூறியிருக்கிறார். மக்களை சந்தித்து கைகுலுக்க ஆர்வம் காட்டிய ராகுல்காந்தி, ஒரு சிலரை ஆரத் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். வட கர்நாடகத்தில் ராகுல் காந்தியை பார்க்க மக்கள் ஆயிரக்கணக்கில் தெருவோரங்களில் காத்திருந்தனர். ராகுல் காந்தியைக் கண்டதும் அவர்கள் உற்சாகத்துடன் கைகளை அசைத்து ஆரவாரம் செய்தனர். இது ராகுல்காந்திக்கு உற்சாகத்தை தந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →