இந்தியா

தேர்தல் ஆணையர்களின் ஊதியம் 2 மடங்கு உயர்வு

DIN

தலைமைத் தேர்தல் ஆணையர் உள்பட 3 தேர்தல் ஆணையர்களின் ஊதியம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் ஊதியம் கடந்த 25ஆம் தேதி அதிகரிக்கப்பட்டது. இதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மாத ஊதியம் ரூ.2.50 லட்சமாக தற்போது உள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, அந்த நடைமுறையை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டுள்ளது. அதாவது, 1991ஆம் ஆண்டு தேர்தல் ஆணைய சட்டத்தின் 3ஆவது பிரிவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு இணையாக தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட 3 தேர்தல் ஆணையர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு இணையாக தேர்தல் ஆணையர்கள் 3 பேருக்கும் ஊதியம் அளிக்கப்படும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட 3 தேர்தல் ஆணையர்களின் மாத ஊதியம் தற்போது ரூ.90 ஆயிரமாக உள்ளது. இது ரூ.2.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வானது, 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு வழங்கப்படவுள்ளது. இந்தத் தகவலை தேர்தல் ஆணைய மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT