இந்தியா

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடகம் தொடர்ந்து எதிர்க்கும்: சித்தராமையா

DIN

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடகம் தொடர்ந்து எதிர்க்கும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்ற கர்நாடகத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைக் கர்நாடகம் தொடர்ந்து எதிர்க்கும். அதற்கான பணி மத்திய அரசுக்கு உரியது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. அதன்படி, காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் கருத்தறிந்த பிறகே, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசால் அமைக்க வேண்டியிருக்கும். எதுவாக இருந்தாலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடக அரசு விரும்பவில்லை. 
தேர்தலில் போட்டியிடுவோர் சொத்து விவரங்களை, வருமானத்தின் மூலத்தை தெரிவிக்கவேண்டும் என்ற நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து முழுமையான தகவல் என்னிடம் இல்லை. அது எப்படி இருந்தாலும், சொத்து விவரங்கள் மற்றும் வருவாய் மூலத்தை தெரிவிக்க வேண்டுமென்ற நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றுவதில் தவறில்லையே. அதனால் நமக்கு என்ன தீமை விளைந்து விடப் போகிறது? என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT