இந்தியா

மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு! 

DIN

ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்க ஜார்கண்ட் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த வருடம் டிசம்பர் 23 ஆம் தேதி பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என தீர்ப்பளித்து 3 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டணை விதித்தது. அதனைத் தொடர்ந்து லாலு தற்பொழுது ராஞ்சி பிஸ்ரா முண்டா சிறைச்சாலையில்  இருக்கிறார். அவர் இதுவரை மூன்று வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லாலு தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு இன்று ஜார்கண்ட் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அவரது மனுவினைத் தள்ளுபடி செய்து நீதிபதி அபரேஷ் குமார் சிங் கூறியதாவது:

ஊழல் காலத்திலேயே லாலு பிரசாத், பீகாரின் முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் இருந்துள்ளார். அனைத்து மோசடி ஊழல்களுமே அவரது தலைமையின் கீழ் நடந்துள்ளது. இதனால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT