இந்தியா

ராணுவத்தில் இளம் அதிகாரிகளுக்கு முக்கியப் பணிகளை வழங்க முடிவு

தினமணி

இளம் அதிகாரிகளுக்கு முக்கியப் பொறுப்புகளை அளிக்கும் வகையில் ராணுவத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முக்கிய நிலைகளில் தலைமை தாக்குவதற்கான வயது வரம்பு குறைக்கப்படவுள்ளது.
 இதன் மூலம் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் உள்ள ராணுவத்துக்கு தலைமை வகிக்கும் பணி ராணுவத்தின் இளம் அதிகாரிகளுக்கு கிடைக்கும்.
 "சரியான அதிகாரிக்கு, சரியான பொறுப்பை வழங்குதல் என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் பல்வேறு நிலைகளில் படைத் தலைவர்களாகப் பணியாற்றுபவர்கள் நீண்டகாலம் அப்பொறுப்பை வகிக்க வேண்டும் என்று ராணுவம் விரும்புகிறது. எனவே, இளம் அதிகாரிகளுக்கு விரைவில் முக்கியப் பொறுப்புகள் அளிக்கப்படவுள்ளன. இதன் மூலம் ராணுவத்தின் ஒட்டுமொத்த செயல்பாடும் மேம்படும். இளம் அதிகாரிகளுக்கு ஊக்கமும், உத்வேகமும் கிடைக்கும்' என்று ராணுவ அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது.
 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும் ராணுவத்தில் இதேபோன்ற ஒரு சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 57,000 அதிகாரிகளுக்கு அதற்கு அடுத்த நிலையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. முன்னதாக, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டி.பி.சிக்கந்தர் தலைமையிலான குழு, ராணுவத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரை அளித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT