இந்தியா

மத்தியப் பிரதேச ஆளுநராக பதவியேற்றார் ஆனந்தி பென் படேல்

தினமணி

மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய ஆளுநராக ஆனந்தி பென் படேல் இன்று பதவியேற்றார். 

மத்தியப் பிரதேச ஆளுநராக இருந்த ராம் நரேஷ் யாதவின் பதவிக் காலம் கடந்த 2016-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, குஜராத் ஆளுநர் ஓ.பி.கோலியிடம், மத்தியப் பிரதேச ஆளுநர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய ஆளுநராக குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேல் நியமிக்கப்பட்டுள்ளதாக, குடியரசுத் தலைவர் மாளிகை சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்ட்டது.

76 வயதாகும் ஆனந்தி பென் படேல், கடந்த 2014-ஆம் ஆண்டில் மோடி பிரதமராக பதவியேற்றதையடுத்து, குஜராத் முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த 2016-இல் அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். 

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேல் இன்று போபாலில் பதவியேற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT