இந்தியா

மாட்டுத்தீவன ஊழல்: மூன்றாவது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு! 

DIN

பாட்னா: மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான மூன்றாவது வழக்கிலும் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

பிகார் மாநில முதல்வராக 1990 முதல் 1997 வரையிலான காலகட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார். அப்பொழுது கால்நடைத் தீவனம் வாங்கியதில் பெருமளவு ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் லாலு மீது சிபிஐ 5 வழக்குகளைப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இது தொடர்பான முதல் வழக்கில் 2013-ஆம் ஆண்டு லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட லாலு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் பெற்றார்.

இரண்டாவது வழக்கில் தியோகர் மாவட்ட அரசு கஜானாவில் இருந்து சட்டவிரோதமாக ரூ.89.27 லட்சம் பரிமாற்றம் செய்த வழக்கில், லாலு, மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டனர். லாலு, 3 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். லாலுவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசா அரசு கருவூலத்தில் இருந்து 33.67 கோடி ரூபாய் முறைகேடான பணப் பரிமாற்றம் செய்ததாக லாலு உட்பட 76 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் 14 பேர் இறந்து விட்டனர். மூன்று பேர் அப்ரூவராக மாறினர். ஒருவர் இன்னமும் தலைமறைவாக உள்ளார். இவர்களை தவிர 56 பேர் மீது வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கில் புதனன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என  நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கபபடலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT