இந்தியா

மாணவிகள் அணிய வேண்டிய உள்ளாடையின் நிறம்: பதற வைத்த பள்ளி நிர்வாகத்தின் அறிவிப்பு 

மாணவிகள் அணிய வேண்டிய உள்ளாடையின் நிறம் மற்றும் ஆடையின் நீளம் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தி, புணேவில் உள்ள பள்ளி ஒன்றின் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ANI

புணே: மாணவிகள் அணிய வேண்டிய உள்ளாடையின் நிறம் மற்றும் ஆடையின் நீளம் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தி, புணேவில் உள்ள பள்ளி ஒன்றின் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் புணேவில் செயல்பட்டு வரும் மெயர் எம்.ஐ.டி பள்ளி நிர்வாகத்தின் தரப்பிலிருந்து, புதனன்று பெற்றோர்களுக்கு ஒரு அறிவிப்பு வந்தது. அதில் இனிமேல் மாணவிகள் அணிய வேண்டிய உள்ளாடையின் நிறம் மற்றும் வெளியில்  அணியும்,ஸ்கர்ட்டின் நீளம் உள்ளிட்ட விஷ்யங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். ஆனால் அவற்றை பள்ளி நிர்வாகம் பொருட்படுத்தவே இல்லை.மாணவர்களின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நிர்வாகம், இதனை பின்பற்றத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.

இந்நிலையில் இதுதொடர்பாக பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் நேரில் சென்று விசாரிக்க மாநில கல்வித்துறை துணை இயக்குநர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும், அக்குழு விசாரித்துக் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில கல்வித்துறை அமைச்சர் வினோத் தாவ்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT