இந்தியா

வரவேற்பு குறைந்ததை அடுத்து புதிய அவதாரம் எடுக்கப் போகிறதா நானோ கார்?

பொதுமக்களிடைய வரவேற்பு குறைந்ததை அடுத்து, டாடா நானோ கார் புதிய அவகாரம் எடுக்கப் போகிறது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

ENS

பொதுமக்களிடைய வரவேற்பு குறைந்ததை அடுத்து, டாடா நானோ கார் புதிய அவகாரம் எடுக்கப் போகிறது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

இப்போது நாங்கள் சொல்லப்போகும் தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல, காதுக்கு எட்டிய தகவல் மட்டுமே.

மக்களுக்கான கார் என்ற அடையாளத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா நானோ காருக்கு மக்களிடையே வரவேற்புக் குறைந்ததை அடுத்து, உற்பத்தியையும் டாடா நிறுவனம் குறைத்துள்ளது.

டாடா நானோ கார்களை உற்பத்தி செய்வதை நிறுத்தப் போவதாக அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை எதுவும் வெளியாகவில்லை. ஆனால், டாடா நானோ காரை, மறுஆக்கம் செய்து எலக்ட்ரிக் கார் என்ற முறையில் அறிமுகம் செய்ய பரிசீலனை உள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் டாடா நானோ கார் ஒன்று கூட ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதே மாதம் கடந்த ஆண்டில் சுமார் 25 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 275 கார்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் ஒரே ஒரு கார் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 167 கார்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் 3 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

டாடா நானோ கார் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்படவில்லை, விரைவில் புதிய அவதாரத்துடன் டாடா நானோ அறிமுகமாகும் என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

SCROLL FOR NEXT