இந்தியா

காஷ்மீருக்கு ஒரு ஹிந்து முதல்வர் வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி வீசும் புது குண்டு 

ANI

புது தில்லி: காஷ்மீருக்கு ஒரு ஹிந்து முதல்வராக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் மெஹபூபா முஃப்தி தலைமையில் நடந்து வந்த மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த மாதம் 19-ஆம் தேதி பாஜக வாபஸ் பெற்றது. அதைத் தொடர்ந்து முதல்வர் பதவியை மெஹபூபா ராஜிநாமா செய்தார். பின்னர் காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் காஷ்மீருக்கு ஒரு ஹிந்து முதல்வராக வேண்டும் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஏ.ஏன்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

காஷ்மீருக்கு ஒரு ஹிந்து முதல்வராக வேண்டும். மக்கள் ஜனநாயக கட்சி ஒரு ஹிந்து அல்லது சீக்கிய உறுப்பினரை முன்னிறுத்தினால் நாங்கள் அவரை முதல்வராக்குவோம்.

காஷ்மீருக்கு ஒரு இஸ்லாமியர்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று மறைந்த பிரதமர் நேரு கொண்டு வந்த வழக்கத்தினை பொறுத்துக் கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT