மும்பை: மும்பையில் கடந்த ஒரு சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் மும்பையில் 200 மிமீ அளவுக்கு மழை பெய்தததால், தண்டவாளப் பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் ரயில் போக்குவரத்தும், சாலைகளில் தேங்கிய மழை நீரால் சாலைப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மழை நீர் வடிந்த பிறகே மெல்ல மெல்ல ரயில் சேவை சீரடைந்து வருகிறது. முக்கியப் பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகிறது.
அடுத்த 72 மணி நேரத்துக்கு மும்பையில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக நேற்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, வரும் வியாழக்கிழமை வரை கன மழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். குடிநீர் ஆதாரமாக விளங்கும் துள்சி ஏரி நிரம்பி வழிந்து வருகிறது.
கன மழை மற்றும் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் டப்பாவாலாக்கள் இன்று தங்களது பணிக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.
சாலைகளில் நீர் தேங்கியிருப்பதால், வெள்ள நீரில் டப்பாவாலாக்கள் சைக்கிளை மிதித்துக் கொண்டு சென்று உரிய நேரத்தில் டப்பாக்களை வாங்கி வருவது கடினம் என்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டதாக மும்பை டப்பாவாலாக்கள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.