இந்தியா

மக்களவைக்கு முன்னதாகவே தேர்தல் இல்லை: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா

DIN

மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மக்களவைக்கும், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஆந்திரம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலரும், மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பேசி வந்தனர்.
இந்நிலையில், தெலங்கானா மாநில பாஜகவினரை வெள்ளிக்கிழமை சந்தித்த அமித் ஷா, அவர்களிடம் பேசுகையில், "மக்களவைக்கோ எந்த மாநில சட்டப் பேரவைக்கோ முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட மாட்டாது. ஏற்கெனவே உள்ள பதவிக் காலம் முடியும் நேரத்தில்தான் தேர்தல் நடைபெறும். தெலங்கானாவில் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிறப்பான வெற்றியை பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்' என்றார்.
இத்தகவலை தெலங்கானா மாநில பாஜக பொதுச் செயலாளர் ஜி.பரமேந்தர் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதேபோல, மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமித் ஷா கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT