இந்தியா

கும்பல் கொலைகள்: ராஜ்நாத் சிங் கருத்துக்கு காங்கிரஸ் வெளிநடப்பு

DIN

மக்களவையில், கும்பல் கொலைகள் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறிய கருத்து திருப்தியளிக்காததை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.  

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் இந்தியாவில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் கும்பல் கொலைகள் குறித்தான விவாதம் எழுந்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், கும்பல் கொலைகளை துரதிருஷ்டவசமானது என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, 

"இது துரதிருஷ்டவசமான நிகழ்வுகள். இதுகுறித்தான அறிவுரை அறிக்கைகள் 2016-ஆம் ஆண்டு ஒரு முறையும் அண்மையில் ஒரு முறையும் வெளியிடப்பட்டது. தவறான செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்புதவதற்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதும் ஒரு காரணம். சமூக வலைதளங்களிடம் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறித்து கேட்டுள்ளோம். 

சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு உள்ளது" என்றார். 

இதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் வெளிநடப்பு செய்வதற்கு முன் அக்கட்சியின் தலைவர் மல்லிகாஜூர்ன கார்கே, மத்திய உள்துறை அமைச்சரின் பதில் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கேஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

துர்ஸ்தானம் எனும் 8ம் வீட்டின் அதிபதி தரும் பலன்கள்!

SCROLL FOR NEXT