இந்தியா

புதிய நூறு ரூபாய் நோட்டு மாதிரியை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

விரைவில் வெளியாகவுள்ள புதிய நூறு ரூபாய் நோட்டின் மாதிரியை ரிசர்வ் வங்கி தற்பொழுது வெளியிட்டுள்ளது.

DIN

புது தில்லி: விரைவில் வெளியாகவுள்ள புதிய நூறு ரூபாய் நோட்டின் மாதிரியை ரிசர்வ் வங்கி தற்பொழுது வெளியிட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு சமயத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து புதிய 50 மற்றும் 10 ரூபாய்  நோட்டுக்கள் இதுவரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து விரைவில் புதிய 100 ருபாய் நோட்டுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள புதிய நூறு ரூபாய் நோட்டின் மாதிரியை ரிசர்வ் வங்கி தற்பொழுது வெளியிட்டுள்ளது.

இந்திய புதிய 100 ரூபாய் நோட்டானது லாவெண்டர் நிறத்தில் காணபப்டும். அத்துடன் இந்த் நோட்டின் முன்பகுதியில் மகாத்மா காந்தி படம் இடம்பெற்றிருக்கும்.

அதேபோல் பின்புறத்தில் குஜராத்தின் பதான் நகரத்தில் உள்ள வரலாற்றுச் சின்னமான 'ராணி கா வாவ்' படிச்  சுவற்றின் படம் இடம்பெற்றுள்ளது     .

இந்த நோட்டானது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. அதேநேரம் தற்பொழுது பயன்பாட்டில் உள்ள பழைய 100 ருபாய் நோட்டுகளும் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT