இந்தியா

பிரதமர் மோடியின் வெற்றி குடும்ப ஆதிக்கத்தின் தோல்வியைக் காட்டுகிறது: அமித் ஷா

குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது. இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அமித் ஷா கூறினார்.

ANI

குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது. இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அமித் ஷா கூறினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றிகரமாக எதிர்கொண்டது குறித்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியதாவது:

குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது. இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடியின் அரசுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி குடும்ப ஆதிக்கத்தை ஒழித்து ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். ஏழைக் குடும்பத்தில் பிறந்து இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு எதிரான தனது வன்மத்தை குடும்ப ஆதிக்கம், சாதி ஆதிக்கம், தீண்டாமை மற்றும் அமைதியின்மை உள்ளிட்டவற்றின் மூலம் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெளிக்காட்டியுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்ததன் மூலம், ஜனநாயகத்தை அழிக்கும் பணியை காங்கிரஸ் கட்சி செய்துள்ளது. அதிலும் பெரும்பான்மையே இல்லாத அக்கட்சி, அரசியலில் இருந்து திவாலாகாமல் இருக்க இதுபோன்ற செயல்களை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிக செலவில் போடப்பட்ட தோட்டா தரணி செட் இதுதானாம்!

ராப் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதி! இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

விஜய் உடன் சந்திப்பு! செங்கோட்டையனுக்கு அமைப்புப் பொதுச் செயலாளர் பதவி?

செண்பகமே செண்பகமே... ரித்விகா!

தேனில் குளித்ததைப் போல... ஆஷி சாஹ்னி!

SCROLL FOR NEXT