கொச்சி: குடும்பத்தின் வறுமையான சூழ்நிலையாலும், படிப்பைத் தொடர வேண்டும் என்ற ஆர்வத்தாலும், மாலை நேரத்தில் மீன் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் கல்லூரி மாணவி ஹனன்.
தம்மனம் சந்திப்புப் பகுதியில் மாலை நேரத்தில் படு ஜோராக மீன் விற்பனையில் ஈடுபடும் ஹனன் பற்றி தெரிய வந்த தகவல் என்னவென்றால், அல் அஸார் கலைக் கல்லூரியில் வேதியியயல் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார் ஹனன்.
அதிகாலையிலேயே எழுந்து மீன் சந்தைக்குச் சென்று மீன்களை வாங்கிக் கொண்டு தம்மனம் சந்திப்புப் பகுதிக்குச் சென்று விடுகிறார். அங்கு ஒரு வீட்டில் மீன்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு கல்லூரிக்குச் செல்கிறார்.
கல்லூரி முடிந்து சுமார் இரண்டரை மணி நேரம் பயணித்து தமன்னம் வந்து, இரவு 9 மணி வரை மீன் விற்பனையில் ஈடுபடுகிறார். பிறகு வீட்டுக்குச் செல்கிறார். இதுதான் ஹனன்-த்தின் அன்றாட வாழ்க்கை.
குடும்பத்தின் வறுமையான சூழ்நிலையால், தாய் மற்றும் சகோதரனுக்கு உதவுவதற்காகவே மீன் விற்பனையில் ஈடுபடுகிறேன். டியூஷன் எடுப்பது, நகைகள் செய்வது என பல வேலைகளை செய்துள்ள ஹனன், மலையாளத்தில் கவிதைகளையும் எழுதுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.