இந்தியா

அக்னி-5 ஏவுகணை இன்று வெற்றிகரச் சோதனை

ஒடிஸாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து அக்னி-5 ஏவுகணை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 

Raghavendran

ஒடிஸாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து அக்னி-5 ஏவுகணை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இன்று காலை சரியாக 9.48 மணியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஏவுகணை 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும் கொண்டது. இதில் ஒரு டன்னுக்கும் அதிகமான எடை கொண்டதாகும். சராசரியாக 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கக் கூடியது.

இந்திய பாதுகாப்புத்துறையில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அக்னி-5 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று துல்லியமாகத் தாக்கக்கூடிய வகையில் அக்னி-6 ஏவுகணையை தயாரிக்கும் பணியில் டிஆர்டிஓ ஈடுபட்டுள்ளது.

தற்போது இந்தியாவிடம் அக்னி-1 (700 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கக்கூடியது), அக்னி-2 (2 ஆயிரம் கிலோ மீட்டர்), அக்னி-3 மற்றும் 4 (3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர்) அக்னி-5 (5 ஆயிரம் கிலோ மீட்டர்) மற்றும் சூப்பர்ஸானிக் பிரம்மோஸ் ரக ஏவுகணைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT