இந்தியா

பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட '9 பைசா' செக் 

பிரதமர் மோடிக்கு இளைஞர் ஒருவர் '9 பைசா' மதிப்புக்கு செக் அனுப்பிய விவகாரம் தற்பொழுது அரங்கேறியுள்ளது.

DIN

ஹைதராபாத்: பிரதமர் மோடிக்கு இளைஞர் ஒருவர் '9 பைசா' மதிப்புக்கு செக் அனுப்பிய விவகாரம் தற்பொழுது அரங்கேறியுள்ளது.

நடந்து முடிந்த கர்நாடகத் தேர்தலையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதல் மே 14-ம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. ஆனால், கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பின், தொடர்ந்து 15 நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்திக் கொண்டே வந்தன.

இதனால் பெட்ரோல் ஒரு லிட்டர் அதிகபட்சமாக ரூ.82க்கும், டீசல் ரூ.73க்கும் விற்பனையானது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் சில காசுகளை ஏதோ பெயரளவுக்குக் குறைத்து வருகின்றன. அதிலும் உச்ச பட்சமாக கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல் மற்றும்  டீசல் விலைகள் வெறும் ஒரு காசு மட்டும் குறைகப்பட்டது

எண்ணெய் நிறுவனங்களின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகளும் மக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மோடிக்கு இளைஞர் ஒருவர்  '9 பைசா' மதிப்புக்கு செக் அனுப்பிய விவகாரம் தற்பொழுது அரங்கேறியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ராஜன்னா சர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்து கவுட். இவர்தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மோடிக்கு 9 காசு காசோலையை அனுப்பியுள்ளார்.

அம்மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா பாஸ்கர் நேற்று 'பிரஜா வாணி' திட்டத்தில் பஙகேற்று இருந்தார். அப்போது அங்கு வந்த சந்து ஆட்சியரிடம் தன்னிடம் இருந்த 9 காசுக்கான காசோலையை பிரதமர் நிவாரண நிதியில் சேர்த்து விடுமாறு கூறி அளித்தார். மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண பாஸ்கரும் அதைப் பெற்றுக்கொண்டு அந்த இளைஞரை அனுப்பிவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொகுசுக் கப்பல் அனுபவம்: வெள்ள பாதிப்புகளை பார்வையிடும்போது பேசுவதா? சர்ச்சையில் அமைச்சர்கள்

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் எம்.பி. 2-வது நாளாக உண்ணாவிரதம்!

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த அகிலேஷ் யாதவ்!

வெற்றி, தோல்விகளை விட முக்கியமானது கற்றல்... அஜித்தின் பொன்மொழி!

77 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

SCROLL FOR NEXT