இந்தியா

ரயிலில் ஏசி வேலை செய்யாததால் பயணிகள் பாதி வழியில் போராட்டம்

DIN

அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து தில்லி வரை செல்லும் விரைவு ரயில் பிரம்மபுத்திரா மெயில். இந்த ரயில் அசாம் திப்ருகாரில் இருந்து கடந்த 9-ஆம் தேதி இரவு 11.25 மணிக்கு தில்லி நோக்கி புறப்பட்டது. இந்த ரயிலில் ஒரு சில பெட்டிகளில் ஏசி வேலை செய்யவில்லை. இதனால், பயணிகள் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி மற்றும் மல்டா ரயில் நிலையங்களில் புகார் அளித்தனர். 

இரண்டு முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மல்டா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலை பயணிகள் செயின் இழுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். அதன்பிறகு மல்டா ரயில் நிலையத்தில் ஏசி சரிசெய்யப்பட்டது. 

இதையடுத்து, அந்த ரயில் மீண்டும் தில்லி நோக்கி சென்றது.  இன்று காலை 4 மணி அளவில் மல்டாவில் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில் 4 மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு புறப்பட்டது. இதனால், மற்ற ரயில் சேவைகளும் சற்று பாதிக்கப்பட்டது.       

இந்த ரயில் தில்லி ரயில் நிலையத்தை நாளை காலை 6 மணி அளவில் சென்றடைய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT