இந்தியா

வாஜ்பாய் சிறுநீரக செயல்பாடு இயல்பு நிலைக்கு திரும்பியது: எய்ம்ஸ்

Raghavendran

உடல்நிலை பாதிக்கப்பட்டதால் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் (93) தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு சிறுநீர்த் தொற்று ஏற்பட்டுள்ளதால் அதற்கான சிகிச்சை ளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக அவரைப் பரிசோதித்து வரும் மருத்துவக் குழுவினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

இதனிடையே, மருத்துவமனைக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் சென்று வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

இந்நிலையில், வாஜ்பாய் உடல்நிலை கடந்த 48 மணிநேரங்களில் நல்ல முறையில் சீரடைந்து வருவதாகவும், அவரின் சிறுநீரக செயல்பாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

மேலும், இதயம் மற்றும் சுவாசம் உள்ளிட்டவை சீராக இயங்கி வருவதாகவும், இன்னும் சில தினங்களில் முழு உடல்நலன் பெறுவார் எனவும் எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT