இந்தியா

டிஜிட்டல் இந்தியா அனைவருக்குமானது: பிரதமர் நரேந்திர மோடி

Raghavendran

டிஜிட்டல் இந்தியாவின் பயன்பாடு அனைவருக்குமானது. அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களுக்கானது என்று பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, பொது சேவை மையத்தின் வாயிலாக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படும் வணிகம் சார்ந்து பல்வேறு தரப்பினருடன் நேரில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

டிஜிட்டல் இந்தியா திட்டம் அனைவருக்குமானது, குறிப்பாக கிராமப்புற மக்களின் சேவைக்காக ஏற்படுத்தப்பட்டது. இதனால் அவர்கள் அதிகளவில் பயனடைந்தால் அதுவே மகிழ்ச்சியானது.

தற்போது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் ரயில் பயணச்சீட்டு உள்ளிட்ட பல்வேறு தேவைகள் மின்னணு முறையில் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. தொழில்நுட்பத்தை அனைவரும் செயல்படுத்தும் விதமாக மாற்றி, அனைவரும் எளிய முறையில் அனைத்தையும் பெறுவதுதான் இதன் முக்கிய வெற்றி.

மேலும் மின்னணு முறைப் பணப் பரிவர்த்தனைகளால் இடைத்தரகர்களின் ஆதிக்கம் குறைந்துள்ளது. அனைவரின் லாபமும் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கே சென்றடைகிறது.

வருகிற ஜூன் 20-ஆம் தேதி இதேபோன்று பொது சேவை மையத்தின் மூலம் நாடு முழுவதிலும் இருந்து 50 முதல் 100 விவசாயிகளிடம் கலந்துரையாட திட்டமிட்டுள்ளேன். அப்போது விவசாயம் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவுள்ளேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT