இந்தியா

கிரிக்கெட் போட்டியில் வன்முறை: இளைஞர் அடித்துக் கொலை

Raghavendran

கிரிக்கெட் போட்டியின் போது இரு அணிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 22 வயது இளைஞர் ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

பெங்களூருவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மஹாலஷ்மி லேஅவுட்டின் குருபரஹள்ளி எனுமிடத்தில் ஜே.சி.நகர் 5-ஆவது தெருவில் அமைந்துள்ள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த இரு குழுவினர் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட மோதலில் 22 வயது இளைஞர் கிரிக்கெட் மட்டையால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மஹாலஷ்மி லேஅவுட் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இதில், கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் மஹாலஷ்மி லேஅவுட் பகுதியிலுள்ள ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த மணிகண்டா என்ற 22 வயது இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் மீது இதே காவல்நிலையத்தில் நிறைய கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தகராறில் மணிகண்டா, எதிரணி வீரர்களை தாக்கியுள்ளான். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக எதிரணி வீரர்கள் மாலை 6:30 மணியளவில் அவனை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இதுதொடர்பாக கிரிக்கெட் விளையாடிய இரு குழுக்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

SCROLL FOR NEXT