முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபுராவில் நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவத்தில் 4 பயங்கரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Updated On : 18 ஜூன், 2018 at 12:27 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:34 PM

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபுராவில் நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவத்தில் 4 பயங்கரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதில் எல்லைப் பாதுகாப்புப்படையினர், ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில், ராணுவம் நடத்தும் பதில் தாக்குதல் சம்பவங்களில் பயங்கராவதிகளும் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். பயங்கரவாதிகளை ஒடுக்கும் விதமாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபுராவில் நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.