இந்தியா

ஆதார் அட்டை வைத்திருந்த சீன நாட்டுக் குடிமகன் மேற்கு வங்கத்தில் கைது 

DIN

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில், ஆதார் அட்டை வைத்திருந்த சீன  நாட்டுக் குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு உதவியதாக, போலி அடையாள அட்டைகள் தயாரித்து வந்த நேபாளி ஒருவரும், உள்ளூர் தொழிலதிபரும் கைது செய்யப்பட்டு காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏமாற்றுதல், மோசடி செய்தல் போன்ற பிரிவுகளின் கீழ் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சீன பாஸ்போர்ட் வைத்திருந்த யெ வாங் என்ற நபர், அடையாள அட்டையாக தான் தங்கிய விடுதியில் ஆதார் அட்டையைக் கொடுத்தததால் சர்ச்சை எழுந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் மேலும் சில போலி ஆவணங்களையும் வைத்திருந்தனர்.

இவர்கள் ஏன் இந்தியாவுக்கு வந்திருக்கின்றனர், ஆதார் அட்டை பெற்றது எப்படி என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT