இந்தியா

நிர்வாக உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினருடன் ஆளுநர் சந்திப்பு

DIN

காஷ்மீரில் பிடிபி-பாஜக கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து அங்கு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. அங்கு ஏற்கனவே ஜூன் 28-ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்க இருப்பதால் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்கிடையில், தற்போது அங்கு மக்கள் ஆட்சியும் முடிவுக்கு வந்ததை அடுத்து, ஆளுநர் அதற்கான முழு பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். 

புதிய பொறுப்பு ஏற்றதை அடுத்து அவர் நிர்வாக உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினருடன் ஆளுநர் வோஹ்ரா சந்திப்பு கூட்டத்தை நடத்தி வருகிறார். அமர்நாத் யாத்திரையும் 8 நாட்களில் தொடங்க இருப்பதால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT