இந்தியா

குற்றவியல் விசாரணைக்கு ஆதார் பயோமெட்ரிக் பயன்படுத்தப்படாது: ஆதார் ஆணையம்

ஆதார் அடையாள அட்டைக்காக சேகரிக்கப்பட்ட பயோமெட்ரிக் தகவல்களை குற்றவியல் விசாரணைக்காக பயன்படுத்தப்படாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

DIN

ஆதார் அடையாள அட்டைக்காக மக்களிடம் அவர்களுடைய பயோமெட்ரிக் தகவல்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) சேகரித்தது. அந்த தகவல்கள் குற்றவியல் விசாரணைக்காக பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியானது. தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் இயக்குநர் ஈஷ் குமார் குறிப்பிட்ட ஆதார் தகவல்கள் போலீஸூக்கு விசாரணைக்காக கொடுக்கவேண்டும் என்று கூறியதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் யுஐடிஏஐ இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,  

"ஆதார் சட்டம் 2016, பிரிவு 29-இன் படி சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆதாரை உருவாக்கவும், ஆதார் வைத்திருப்பவர்களுக்கு அதனை அங்கீகரிக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படும். பிரிவு 33-இன் படி அமைச்சரவை செயலாளர்கள் தலைமையிலான குழு ஒப்புதல் வழங்கிய பிறகு தேசிய பாதுகாப்பு சம்மந்தப்பட்ட மிகவும் குறிப்பிட்ட சில வழக்குகளுக்கு மட்டுமே பயோமெட்ரிக் தகவல்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் கூட இதே நிலைப்பாட்டை தான் எடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் சட்டரீதியிலான இந்த நிலை இருப்பதால் யுஐடிஏஐ பயோமெட்ரிக் தகவலை எந்த குற்றவியல் விசாரணை நிறுவனத்துக்கு வழங்கவில்லை என்பது தெரிகிறது.

மும்பை நீதிமன்றம் குறிப்பிட்ட ஒரு வழக்குக்காக பயோமெட்ரிக் தகவலை ஒரு விசாரணை நிறுவனத்திடம் வழங்குமாறு உத்தரவிட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டுக்காக சென்றது. அந்த உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT