இந்தியா

விவசாயிகளின் தற்கொலைதான் இருமடங்கு அதிகரித்துள்ளது: மோடிக்கு சிவசேனை பதிலடி

DIN

விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு அதிகரிக்கப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்; ஆனால், நாட்டில் விவசாயிகளின் தற்கொலைதான் இருமடங்காகிவிட்டது என்று சிவசேனை கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த புதன்கிழமை விடியோ கான்பரன்ஸிங்' முறையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் மோடி உரையாடினார். அப்போது, நமது நாட்டில் வரும் 2022-ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நோக்கில், பட்ஜெட்டில் வேளாண்மைத் துறைக்கான நிதி ஒதுக்கீடு இரு மடங்காக்கப்பட்டுள்ளது. விதையைத் தேர்வு செய்வதில் இருந்து, விளை பொருள்களை சந்தைப்படுத்துவது வரை விவசாயத்தின் அனைத்து நிலைகளிலும் விவசாயிகளுக்கு அரசு துணை நின்று வருகிறது. எனவே, 2022-இல் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாவது உறுதி' என்று பேசினார்.
இந்நிலையில், சிவசேனை கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் மோடியின் இந்த பேச்சை விமர்சித்து வெள்ளிக்கிழமை கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அடுக்கடுக்கான வாக்குறுதிகளையும், பொய்ப் பிரசாரங்களையும் கேட்டு நாடே சலிப்படைந்த நிலையில் உள்ளது. இப்போது, 2022-ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்று பிரதமர் கூறியுள்ளார். இது ஒன்றும் புதிய அறிவிப்பு இல்லை. 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் இது இடம் பிடித்திருந்தது. அப்போது, தாங்கள் ஆட்சி வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று கூறியிருந்தனர். இப்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2022-ஆம் ஆண்டில் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்று பிரதமர் கூறுகிறார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம்தான் இதில் உள்ளது.
இந்த ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை. அவர்களது தற்கொலைதான் இரட்டிப்பாகியுள்ளது. பாஜகவை ஆட்சிக்குக் கொண்டு வந்த விவசாயிகளுக்கு கிடைத்த பரிசு இதுதான். தங்கள் ஆட்சியில் நாட்டு மக்களுக்கு நல்ல நாள்கள் வரும் என்று வாக்குறுதி அளித்தார்கள். இப்போது யாருக்கு நல்ல நாள்கள் வந்துள்ளன என்று விளக்கமாகக் கூற முடியுமா?. விவசாய இடுபொருள்கள் விலை உயர்ந்துள்ளது. போதிய நீர்ப் பாசன வசதியும், மின்சார வசதியும் இல்லாமல் பல விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு வங்கிகள் முறைப்படி கடன் அளிப்பதும் இல்லை.
ஆனால், தொழிலதிபர்கள் பலருக்கு கோடிக்கணக்கில் பணத்தைத் கொடுத்து, அவற்றை வாராக்கடன் கணக்கில் வங்கிகள் காட்டி வருகின்றன. இதுதான் மோடி ஆட்சியின் முக்கிய சாதனை. 2014-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை நமது நாட்டில் 40 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT