இந்தியா

323 கி.மீ... 94 நிமிடங்கள்...சிறுமியின் உயிர் காக்க பறந்து வந்த இதயம்!

தினமணி

உயிருக்கு போராடி வந்த நான்கு வயது சிறுமி ஒருவருக்கு பொருத்துவதற்காக மகாராஷ்டிர மாநிலம் ஒüரங்காபாதில் இருந்து மும்பைக்கு 94 நிமிடங்களில் இதயம் கொண்டு வரப்பட்டது. சுமார் 323 கிலோ மீட்டர் தொலைவை வெறும் ஒன்றரை மணி நேரத்தில் கடந்ததன் காரணமாக உரிய தருணத்தில் அந்த இதயம் சிறுமிக்கு பொருத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 ஜால்னா பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவர் இதய செயலழிப்பால் பாதிக்கப்பட்டு ஒüரங்காபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவர் உயிர் பிழைப்பார் என மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
 இந்நிலையில், மும்பையில் 13 வயது சிறுவன் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்தார். இதையடுத்து அவரது இதயத்தை சம்பந்தப்பட்ட சிறுமிக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக மும்பையில் இருந்து ஒüரங்காபாத்துக்கு விமானம் மூலம் இதயம் எடுத்துவரப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு வாகனம் மூலம் 18 நிமிடங்களில் கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து இதயத்தை சிறுமிக்கு பொருத்தியதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT