ஏசி-யில் வைக்கப்படும் குளிரூட்டியின் அளவு இயல்புநிலையாக 24 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே குறைந்தபட்சமாக இருக்கம்படி வடிவமைக்குமாறு ஏசி உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் ஏசி உற்பத்தியாளர்களுடனான கூட்டம் நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது:
ஏசி குளிரூட்டி அளவைப் பொருத்தவரையில் ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் குறையும் போது அதனால் ஏற்படும் மின் தேவை 6 சதவீதம் குறைகிறது. மனித உடலின் இயல்பு வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். ஆனால், உணவகங்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள், அலுவலகங்களில் 18 முதல் 21 டிகிரி செல்சியஸ் அளவில் குளிரூட்டி வைக்கப்படுகிறது. இது மனித உடலுக்கு மிகவும் தீங்கானது.
எனவே ஏசி உற்பத்தியாளர்கள் இதுகுறித்த அறிவிப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிகளவிலான ஏசி பயன்பாடு சுற்றுச்சூழல் மாசுக்கும் வழிவகுக்கும். ஆனால், குளிரூட்டியின் அளவு 24 முதல் 26 வரை இருக்கும் போது இதன் தாக்கம் குறைகிறது.
ஜப்பான் போன்ற நாடுகளில் ஏசி-யின் இயல்புநிலை குளிரூட்டி அளவு 28 டிகிரி செல்சியஸ்யாகவே உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.