இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: தில்லி உயர் நீதிமன்றத்தை அணுக கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

DIN

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு பதிவு செய்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, கருப்புப் பண முறைகேடு வழக்கு ஒன்றை அமலாக்கத் துறை தனியாக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு தடைகோரியும் உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் இடைக்காலத் தடை பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே மறுத்துவிட்ட நிலையில், இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதிகள் கார்த்தி சிதம்பரம் தரப்பிடம் தெரிவித்தனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு திரும்பப் பெற்றது.
உடனடியாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் அவரது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கருப்புப் பண முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும். எவ்வித சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல் இந்த வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ்.ரவீந்திர பட் தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ தனது காவலில் வைத்து விசாரித்து வருகிறது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்காத அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் சிபிஐ ஏற்கெனவே மனு தாக்கல் செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT