இந்தியா

பதவி போனவுடனே கட்சி அலுவலகத்தில் குடியேறிய முதல்வர்: இப்படியும் சில மனிதர்கள்!  

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்து முதல்வர் பதவியை இழந்தவுடன், தனது அதிகாரபூர்வ இல்லத்தை காலி செய்து விட்டு கட்சி அலுவலகத்தில் முதல்வர் ஒருவர் குடியேறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது 

DIN

அகர்தலா: சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்து முதல்வர் பதவியை இழந்தவுடன், தனது அதிகாரபூர்வ இல்லத்தை காலி செய்து விட்டு கட்சி அலுவலகத்தில் முதல்வர் ஒருவர் குடியேறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது 

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.  திரிபுராவில் மொத்தம் உள்ள 59 தொகுதிகளில் பாஜக கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்காரணமாக அங்கு 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதையடுத்து முதல்வர் மாணிக் சர்க்கார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அங்கு புதிய அரசு பதவியேற்கும் வரை பொறுப்பு முதல்வராக பதவி வகித்து வருகிறார். மாணிக் சர்க்கார் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து உடனடியாகத் தான் வசித்து வந்த அரசு வீட்டை காலி செய்தார்.

இந்தியாவிலேயே சொந்த வீடு இல்லாத எளிமையான முதல்வராக இருந்து வந்தவர மாணிக் சர்க்கார். அவருக்கு குடியிருக்க வீடு இல்லாததால் ராஜினாமா செய்தவுடன் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது மனைவியுடன் குடியேறியுள்ளார்.  கட்சி அலுவலகத்தின் மேல் தளத்தில் உள்ள அறையில் அவரும் அவரது மனைவி பாஞ்சாலி சர்க்காரும் தங்கியுள்ளனர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

அரசுப் பதவியை விட்டு விலகி விட்டதால் வீட்டை காலி செய்வது தான் சரியான நடைமுறை. எனவே உடனடியாக வீட்டை காலி செய்து விட்டேன். அதேசமயம் அகர்தலாவில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கலாம். உறவினர்களும் எங்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் நான் கட்சி அலுவலகத்திலேயே தங்க முடிவு செய்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் திரிணமூல் காங். எம்.பி.க்கள் தலைவராக மம்தாவின் மருமகன் தேர்வு!

ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமலின் புதிய படத்திற்கான பூஜை!

திருமண நகைகள் திருடுபோனதால் கதறி அழும் காஷ்மீர் சிஆர்பிஎஃப் வீராங்கனை!

இரவில் சென்னை, 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் விஜய்

SCROLL FOR NEXT