இந்தியா

ஷாப்பிங் மாலில் சீரழிக்கப்பட்ட சிறுமி: சர்வதேச மகளிர் தினத்தன்று இந்தூரில் நடந்த கொடூரம்! 

PTI

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சர்வதேச மகளிர் தினமான வியாழன் அன்று ஷாப்பிங் மால் ஒன்றில் 9 வயது சிறுமி ஒருத்தி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அமைந்துள்ளது புகழ் பெற்ற 'ட்ரஷர் ஐலண்ட்'  ஷாப்பிங் மால். இந்த மாலுக்கு வியாழன் அன்று தனது பெற்றோருடன்  9 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். அவர் அங்குள்ள விடியோ கேம் மையத்தில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். 

அப்பொழுது அங்கு பணிபுரியும் அர்ஜுன் ரத்தோர் என்ற இளைஞன் அந்த சிறுமியை அந்த ஷாப்பிங் மாலின் மற்றொரு மூலைக்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமி அவளது பெற்றோரிடம் அழுது கொண்டே வந்து சொன்ன பிறகு அவர்களுக்கு விபரம் தெரிய வந்துள்ளது.

உடனடியாக அங்கிருந்த மக்கள் அர்ஜுனை பிடித்து அடித்து உதைத்து, காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அவன் மீது இந்திய தண்டனைப்  பிரிவுச்  சட்டம் 376 மற்றும் 'போஸ்கோ' சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

SCROLL FOR NEXT