இந்தியா

2ஜி குறித்த அனைத்து வழக்குகளையும் 6 மாதங்களில் முடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

2ஜி அலைக்காற்றை ஒதுக்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் 6 மாதங்ககளில் முடிக்க வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PTI


புது தில்லி: 2ஜி அலைக்காற்றை ஒதுக்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் 6 மாதங்ககளில் முடிக்க வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2ஜி வழக்கு தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா மற்றும் நவீன் சின்ஹா ஆகியோர் கொண்ட அமர்வு, 2ஜி அலைக்கற்றை வழக்கு நீண்ட காலமாக விசாரணையிலேயே உள்ளது. சிபிஐயும், அமலாக்கத் துறையும் இந்த விஷயத்தில் நாட்டு மக்களை இன்னும் நீண்ட நாட்களுக்கு இருட்டிலேயே வைத்திருக்க முடியாது. இந்த விவகாரம் நாட்டுக்கு மிகவும் முக்கியமான வழக்கு. இத்தனை ஆண்டுகள் ஆகியும் விசாரணை இன்னும் முடிவடையாதது ஏன் என்று மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

வழக்கு விசாரணையில் ஏற்பட்டிருக்கும் தாமதம் குறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம். இந்த நடைமுறை அதிருப்தியையை ஏற்படுத்துகிறது. எனவே, 2ஜி தொடர்பான அனைத்து வழக்கு விசாரணையையும் அடுத்த 6 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும். விசாரணையின் போது எந்த விஷயத்தையும் ஒதுக்கிவிடாமல் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

போராடும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

SCROLL FOR NEXT