இந்தியா

கார்த்தி சிதம்பரத்துக்கு 12 நாள் நீதிமன்றக் காவல்: திகார் சிறையில் அடைக்க உத்தரவு

ஐஎன்எக்ஸ் நிறுவன முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு 12 நாள் நீதிமன்றக் காவல் பிறப்பித்துள்ள பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம், அவரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

PTI


புது தில்லி: ஐஎன்எக்ஸ் நிறுவன முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு 12 நாள் நீதிமன்றக் காவல் பிறப்பித்துள்ள பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம், அவரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டால், சிறப்பு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த கோரிக்கையை விசாரித்த பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம், சிறை விதிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், சிறை மருத்துவரின் அறிவுரைப்படி மருந்துகள் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும் சிறையில் இருக்கும் போது வெளியில் இருந்து உணவு வழங்கவும் நீதிபதி மறுத்துவிட்டார்.

சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனில் முன்பு கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். கார்த்தி சிதம்பரத்துக்கு 12 நாள் நீதிமன்றக் காவல் விதித்த நீதிமன்றம், அவரை மார்ச் 24ம் தேதி வரை திகார் சிறையிலடைக்கவும் உத்தரவு பிறப்பித்தது.

கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு வரும் 15ம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், 12 நாட்களுக்கு நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

போராடும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

SCROLL FOR NEXT