இந்தியா

851 அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் 2 ஆண்டுகளில் குறைப்பு: மத்திய அரசு

DIN

கடந்த இரு ஆண்டுகளில் 851 அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா செவ்வாய்க்கிழமை எழுத்துமூலம் அளித்த பதில்:
234 அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை அரசு 5 சதவீதம் வரை குறைத்துள்ளது. 134 மருந்துகளின் விலைகள் 5 முதல் 10 சதவீதம் வரையும் 98 மருந்துகளின் விலைகள் 10 முதல் 15 சதவீதம் வரையும் குறைக்கப்பட்டன. 98 வகை அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் 15 முதல் 20 சதவீதம் வரையிலும், 93 மருந்துகளின் விலைகள் 20 முதல் 24 சதவீதம் வரையிலும் குறைக்கப்பட்டன.
தேசிய மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் 65 மருந்துகளின் விலைகளை 25 முதல் 430 சதவீதம் வரையும், 46 மருந்துகளின் விலைகளை 30 முதல் 35 சதவீதம் வரையும் 24 மருந்துகளின் விலைகளை 35 முதல் 40 சதவீதம் வரையும் 59 மருந்துகளின் விலைகளை 40 சதவீதம் வரையும் குறைத்துள்ளன என்று அவர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
மற்றொரு கேள்விக்கு அவர் அளித்த பதிலில் 'மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் பட்டியலில் இடம்பெற்றுள்ள மருந்துகளின் விற்றுமுதல் கடந்த ஆண்டில் டிசம்பர் 31வரை ரூ.19,877 கோடியாக இருந்தது. அந்தப் பட்டியலில் இடம்பெறாத மருந்துகளின் விற்றமுதல் கடந்த ஆண்டில் ரூ.96,4512 கோடியாக இருந்தது. 
இந்த இரு வகை மருந்துகளின் மொத்த விற்றுமுதல் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 389 கோடியாக இருந்தது. இது 6 சதவீத வளர்ச்சியாகும்' என்றுதெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT