இந்தியா

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு: தமிழகம், தெலங்கானாவைச் சேர்ந்த 4 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

DIN

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்ட தமிழகம், தெலங்கானாவைச் சேர்ந்த நால்வர் மீது தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சென்னை, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட இடங்களில் அவர்கள் ரகசியக் கூட்டங்கள் நடத்தி பயங்கரவாதத் திட்டங்களுக்கு நிதி திரட்டியதாக அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் ஹாஜா ஃபக்ருதீன். சிங்கப்பூர் வாழ் இந்தியரான அவர், கடந்த 2014-ஆம் ஆண்டில் தனது குடும்பத்துடன் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்தார். அதற்கு முன்னதாக, தமிழகம் மற்றும் தெலங்கானாவில் பயங்கரவாத சதித் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்கான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது.
அதற்காக கடந்த 2013-ஆம் ஆண்டில் சென்னைக்கு மூன்று முறை அவர் சென்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஆகிய ஊர்களில் அவர் சதி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியதாகத் தெரிகிறது.
அதற்கு தமிழகம் மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த காஜா மொய்தீன், ஷாகுல் ஹமீது, அன்சார் மீரான் ஆகியோர் உதவியதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், வெவ்வேறு இடங்களில் பயங்கரவாத முகாம்களையும் அவர்கள் ரகசியமாக நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான உளவுத் தகவல்கள் கிடைத்ததை அடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்குமாறு என்ஐஏ அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் அவர்கள் நால்வர் மீதும் என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர். அதுகுறித்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நால்வருக்கு எதிராகவும் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT