இந்தியா

பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நாள்களை குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

DIN

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நாள்களை குறைக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நாள்களை மத்திய அரசு குறைக்க திட்டமிட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளன. அந்த குற்றச்சாட்டை நிராகரிக்கும் வகையில், மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது.
இதுகுறித்து தில்லியில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கூட்டத் தொடர் நடைபெறும் நாள்களை குறைக்கும் திட்டமில்லை. இந்த கூட்டத் தொடர் முழுமையும் நடத்த முடிக்கவே அரசு விரும்புகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் மசோதா, மோட்டார் வாகனங்கள் சட்டத் திருத்த மசோதா போன்ற ஏராளமான மசோதாக்களை, இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியானது சரிவைச் சந்திக்கும், தோல்வியைச் சந்திக்கும் அமைப்பாக திகழ்கிறது. நாடாளுமன்ற பாரம்பரியங்களை அக்கட்சி பின்பற்றுவதில்லை. உரை நிகழ்த்துவதற்கான களமாக மட்டுமே நாடாளுமன்றத்தை காங்கிரஸ் பயன்படுத்துகிறது.
தேர்தல்களில் கட்சி அடைந்த தோல்வியை எதிர்கொள்ள முடியாமல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாடு சென்று விடுகிறார். இந்நிலையில், அக்கட்சியால் எப்படி கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என கேள்வியெழுப்பினார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT