இந்தியா

இனி நகர்புறங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் சீறப் போகும் வாகனங்கள்! 

நாடு முழுவதும் நகர்புறங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் வாகனங்களின் உட்ச பட்ச வேக வரம்பினை அதிகரிக்க மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

DIN

புதுதில்லி: நாடு முழுவதும் நகர்புறங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் வாகனங்களின் உட்ச பட்ச வேக வரம்பினை அதிகரிக்க மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதிலும் உள்ள நகரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில், தற்பொழுது வாகனங்களுக்கு மணிக்கு 40 முதல் 50 கி.மீ என்பது அதிகபட்ச வேகக்கட்டுப்பாட்டு வரம்பாக உள்ளது.

ஆனால் நகர்புறங்களில் சுற்றுச் சாலைகள், சாலை விரிவாக்கத்திட்டங்கள் மற்றும் மேம்பாலங்கள் உள்ளிட்டவைகளை அமைப்பது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் நகர்புறங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் வாகனங்களின் உட்ச பட்ச வேக வரம்பினை அதிகரிக்க மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்காரி ஒப்புதல் அளித்து வெளியிட்டுளள அறிக்கையில், 'நகர்புறங்களில் கார்கள் அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்திலும், கனரக வாகனங்கள் 60 கி.மீ வேகத்திலும் மற்றும் இரு சக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகத்திலும் செல்லலாம்.

இந்த வரம்பினை  அந்த அந்த மாநிலங்களில் உள்ள உள்ளூர் நிர்வாகங்கள் உள்ளூர் பாதுகாப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT