இந்தியா

தங்கள் சித்தாந்தங்களை எதிர்த்தவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் பாஜக: ராகுல் கண்டனம்! 

தங்கள் சித்தாந்தங்களை எதிர்த்தவர்களின் சிலைகளை சேதப்படுத்துமாறு பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களைத் தூண்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

DIN

புதுதில்லி: தங்கள் சித்தாந்தங்களை எதிர்த்தவர்களின் சிலைகளை சேதப்படுத்துமாறு பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களைத் தூண்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைந்துள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் இரவு யாரோ விஷமிகள் பெரியார் சிலையின் தலையை உடைத்து தனியாகத் துண்டித்துள்ளனர். மேலும் பெரியாரின் கையில் இருந்த தடியும் உடைக்கப்பட்டுள்ளது.

துண்டிக்கப்பட்ட சிலையின் தலைப் பகுதி அதே பகுதியில் வீசப்பட்டு கிடந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் காலை 8 மணிக்கு முன்னதாக உடைக்கப்பட்ட பெரியார் சிலையின் தலையை ஒட்ட வைத்தனர். இருந்த போதிலும் பதற்றத்தினைத் தணிக்க தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தங்கள் சித்தாந்தங்களை எதிர்த்தவர்களின் சிலைகளை சேதப்படுத்துமாறு பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களைத் தூண்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது

திரிபுராவில் லெனின் சிலையை அகற்ற பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் ஊக்குவித்தது போல், தமிழகத்தில் பெரியார் போன்று  தங்கள் சித்தாந்தங்களை எதிர்த்தவர்களின் சிலைகளை சேதப்படுத்துமாறும் தங்கள் தொண்டர்களுக்கு பாஜக கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதியும், தலித்களுக்காக போராடியவருமான பெரியாரின் சிலை இன்று தமிழகத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உளவுத்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி: முதல்வர் நெகிழ்ச்சி!

பிராட்மேனின் 90 ஆண்டுகால சாதனையை முறியடிப்பாரா ஷுப்மன் கில்?

விழிகளால் பேசு... ஹூமா குரேஷி

இந்தப் படத்தைப் பார்த்தீர்களா? பிளாக்பஸ்டரான சு ஃப்ரம் சோ!

SCROLL FOR NEXT