இந்தியா

25 கிலோ கட்டியுடன் வாழ முடியவில்லை: கருணை கொலை செய்யக் கோரும் ஆந்திரப் பெண்

வயிற்றில்  இருக்கும் 25 கிலோ கட்டியால் ஏற்படும் அதீத வலியுடன் தன்னால் வாழ முடியவில்லை என்றும், தன்னை கருணைக் கொலை செய்யுமாறும் ஆந்திராவைச் சேர்ந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

ENS


காக்கிநாடா: வயிற்றில்  இருக்கும் 25 கிலோ கட்டியால் ஏற்படும் அதீத வலியுடன் தன்னால் வாழ முடியவில்லை என்றும், தன்னை கருணைக் கொலை செய்யுமாறும் ஆந்திராவைச் சேர்ந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மிஷ்ராவிடம் இது குறித்து 37 வயதாகும் பட்டி ராமலஷ்மியின் கணவர் கோண்டா பாபு நேற்று மனு அளித்தார்.

குறை தீர் முகாமுக்கு தனது கணவருடன் ஆட்டோவில் வந்த பட்டி ராமலஷ்மியால் ஆட்டோவில் இருந்து இறங்க முடியாததால், அவர் சார்பில் மனுவை ஆட்சியரிடம் கோண்டா பாபு வழங்கினார்.

தனது வயிற்றில் வளரும் கட்டியை அகற்ற ரூ.4.5 லட்சம் செலவாகும். அதனை செலுத்த தன்னிடம் பணமில்லாததால், தன்னை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆட்சியர், என்டிஆர் ஆரோக்யா ஸ்ரீ திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு தகவல் தெரிவித்து, அப்பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். தம்பதியர் நம்பிக்கையை இழந்து விட வேண்டாம் என்றும், அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்ற தனது அதிகாரத்துக்கு உட்பட்டு எந்த விதமான உதவிகளை செய்ய முடியுமோ அனைத்தையும் செய்வதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.

நாளுக்கு நாள் வலி அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. கட்டி வளர்வதால் என்னால் அசையக் கூட முடியவில்லை. எனவேதான் கருணைக் கொலை செய்ய கோரிக்கை விடுத்துள்ளேன் என்கிறார் பட்டி ராமலஷ்மி கண்ணீரோடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீயணைப்பு பணியின் போது சிலிண்டா் வெடித்து விபத்து: 13 போ் காயம்

வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

மகளிருக்கு ரூ.5,000 வழங்க அதிமுகவின் அழுத்தமே காரணம்: எடப்பாடி கே.பழனிசாமி

23.2.1976: இருஅடுக்கு ரயில் பெட்டி மேற்கூடு - பெரம்பூர் தொழிற்சாலை தயாரிக்கிறது

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

SCROLL FOR NEXT