இந்தியா

முப்படை வீரர்கள் குழந்தைகளின் கல்விச் சலுகைகள் தொடரும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

முப்படை வீரர்கள் குழந்தைகளின் கல்விச் சலுகைகள் தொடரும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

Raghavendran

முப்படை வீரர்கள் குழந்தைகளின் கல்விச் சலுகைகள் தொடரும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முப்படைகளைச் சேர்ந்த வீரர்களின் குழந்தைகளுடைய கல்விச் சலுகைகளுக்கு வழங்கப்படும் ரூ.10,000-ஐ நீக்குமாறு நிதியமைச்சகத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் கோரிக்கை வைத்தது. பின்னர் ஜூலை மாதம் இந்தச் சலுகையானது ரூ.10,000-ஐ விட அதிகரிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இது முப்படைகளைச் சேர்ந்த வீரர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், முப்படைகளைச் சேர்ந்த வீரர்களின் குழந்தைகளுடைய கல்விச் சலுகைகள் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய அறிவிப்பு ஒன்றை வியாழக்கிழமை வெளியிட்டார். அதில்,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், ராணுவப் பள்ளிகள், மத்திய - மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தன்னாட்சி பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்து இடங்களில் தங்கள் கல்வியை பயின்று வரும் முப்படைகளைச் சேர்ந்த வீரர்களின் குழந்தைகளின் கல்விச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அரசாணையுடன் பதிவிட்டுள்ளார். அதுபோன்று இந்த கல்விச் சலுகையானது சீருடைகள், புத்தகங்கள் மற்றும் இதர கல்வி தொடர்பான பொருட்கள் அனைத்துக்கும் சேர்த்து இந்த சலுகைகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தோ்வு முடிவுகள் வெளியீடு

ராமேசுவரத்தில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுக, அமமுகவினா் மரியாதை

SCROLL FOR NEXT