இந்தியா

எல்லையில் இனிப்பு பரிமாறிக்கொண்ட இந்தியா-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்

Raghavendran

லாஹூர் தீர்மானத்தை கொண்டாடும் விதமாக இந்திய எல்லையோரப் படையினருக்கு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.

கடந்த 1940-ஆம் வருடம் மார்ச் 23-ந் தேதி முஸ்லிம்களுக்கு தனிநாடு ஏற்படுத்தக் கோரி முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக லாஹுர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அவர்களுக்கு தனிநாடு ஏற்பட்டதுடன், பின்னாளில் அது பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டது.

இதை கொண்டாடும் விதமாக பாகிஸ்தான் அரசு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23-ந் தேதி பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அவ்வகையில் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தினரும் இந்த தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், அட்டாரி - வாகா எல்லைப் பகுதியில் உள்ள இந்திய எல்லையோரப் படையினருக்கு, பாகிஸ்தான் ராணுவத்தினர் இனிப்புகளை வழங்கி லாஹூர் தீர்மானம் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். 

இருநாடுகளுக்கு இடையில் நிலவும் எல்லைப் பிரச்னையில் இருநாட்டு ராணுவ வீரர்களிடையே ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு மேலோங்கும் விதமாக இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT