இந்தியா

மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கு: அபு சலேமுக்கு நீதிமன்றம் வாரண்ட்

தினமணி

தொழிலதிபரை மிரட்டி பணம் வசூலித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிழல் உலக தாதா அபு சலேமை வரும் 27-ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
 முன்னதாக, இதுதொடர்பான விசாரணைக்கு அவரை ஆஜர்படுத்த இயலவில்லை என்று சிறைத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
 அதையடுத்து, இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நடைபெறும் 27-ஆம் தேதி அபு சலேமை ஆஜர்படுத்த வேண்டும் என்று கூடுதல் நீதிபதி தருண் ஷெராவத் உத்தரவிட்டார்.
 கடந்த 2002-ஆம் ஆண்டு தில்லியில் தொழிலதிபர் அசோக் குப்தா என்பவரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாக அபு சலேமுக்கு எதிராக புகார் எழுந்தது. இந்த வழக்கில் தனக்கு எதிராக எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று அபு சலேம் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 ஆனால், அவர் குப்தாவிடம் தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடல் பதிவுகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
 கடந்த 2005-இல் போர்ச்சுகலில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட சலேம், 1999-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு வழக்கிலும், வேறு சில வழக்குகளிலும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மிரட்டி பணம் வசூலித்த வழக்கில் மட்டும் அவர் ஜாமீன் பெற்றுள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT