இந்தியா

ரூ.40 லட்சம் கைக்கடிகாரம் பயன்படுத்தும் ஒரே சமூகநீதித் தலைவர் சித்தராமையா: அமித்ஷா தாக்கு

Raghavendran

கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து அங்கு இரு கட்சிகளின் தலைவர்கள் முகாமிட்டு தேர்தல் பணிகளை முடக்கிவிட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல், கர்நாடகாவில் 4 முறை சுற்றுப்பயணம் செய்து தெருமுனைப் பிரசாரத்தில் இருந்து பொதுக்கூட்டம் வரை பங்கேற்றுள்ளார். அதுபோல பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்ற பிரசாரத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கலந்துகொண்டுள்ளார். அப்போது, ரூ.40 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம் பயன்படுத்தும் ஒரே சமூகநீதித் தலைவர் கர்நாடக முதல்வர் சித்தராமையா மட்டும் தான். இதுவே அவரது ஊழல் அரசுக்கு ஒரு சான்றாகும் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT