இந்தியா

வீடில்லாதவர்கள் தங்கள் வாசலில் உறங்குவதைத் தடுக்க வங்கியின் விபரீத யோசனை!    

வீடில்லாதவர்கள் தங்கள் வங்கிக் கிளையின் வாசலில் உறங்குவதைத் தடுக்க வங்கி ஒன்று ஆணிப்படுக்கை அமைத்த விவகாரம் சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது.

ANI

மும்பை: வீடில்லாதவர்கள் தங்கள் வங்கிக் கிளையின் வாசலில் உறங்குவதைத் தடுக்க வங்கி ஒன்று ஆணிப்படுக்கை அமைத்த விவகாரம் சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது.

மும்பையின் புகழ்பெற்ற போர்ட் பகுதியில் ஹெச்.டி.எப்.சி வங்கியின் புதிய கிளை ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டது. அப்பொழுது அந்த கிளையின் வாசலில் உள்ள நடைபாதை பகுதியில் கூர்மையான ஆணிகளால் அமைந்த படுக்கை போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக மும்பையின் பெரிய கட்டடங்களின் வாசலில் இரவில் வீடில்லாதவர்கள் படுத்து உறங்குவது வழக்கம். அப்படி யாரும் படுத்து உறங்காமல் தடுக்கும் பொருட்டு இப்படி ஒரு கொடுமையான ஏற்பாட்டினை அந்த வங்கி செய்துள்ளது.

வாடிக்கையாளர்கள் சிலர் எடுத்த புகைப்படங்களின் மூலம் இது சமுக வலைத்தளங்களில் பரவலான கவனம் பெற்றது. அதன் தொடர்ச்சியாக வங்கி நிர்வாகம் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, உடனடியாக அந்த அமைப்பு நீக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளது   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT