முகப்பு
இந்தியா

மோடி அரசு ஒன்றுமே செய்யாது: அமித் ஷாவின் பிரசாரத்தில் மீண்டும் ஒரு பலே சொதப்பல்

கர்நாடகாவில் நடைபெற்ற அமித்ஷாவின் பிரசாரத்தில் ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும் நரேந்திர மோடி அரசு ஒன்றுமே செய்யாது என்று பாஜக எம்பி ஒருவர் மொழி பெயர்த்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 29 மார்ச், 2018 at 3:07 PM
பகிர்:


கர்நாடகாவில் நடைபெற்ற அமித்ஷாவின் பிரசாரத்தில் ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும் நரேந்திர மோடி அரசு ஒன்றுமே செய்யாது என்று பாஜக எம்பி ஒருவர் மொழி பெயர்த்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்டப் பேரவைக்கு மே மாதம் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருப்பதாக தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இத்தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பாவை முன்னிறுத்தி பாஜக பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, பாஜக தேதேசியத் தலைவர் அமித் ஷா, ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும் சித்தராமையா அரசு ஹிந்தியில் பேச, அதனை பாஜக எம்.பி. பிரஹலத் ஜோஷி கன்னடத்தில் மொழி பெயர்த்துக் கூறும் போது, ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒன்றும் செய்யாது என்று கூறிய சம்பவம் எடியூரப்பா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மிகப்பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

Advertisement

ஏற்கனவே ஊழலில் எடியூரப்பா அரசுக்குத்தான் முதலிடம் என்று அமித் ஷா வாய் தவறி கூறிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இன்று வரை சக்கைப் போடு போடும் நிலையில், அதற்குள் மற்றொரு சர்ச்சையை அமித் ஷா அன்ட் கோவினரே கிளப்பிவிட்டுள்ளனர்.

ஏற்கனவே கர்நாடகத்தில் செய்தியாளர்களிடம் அமித் ஷா பேசுகையில், 'ஊழல் குறித்து ஓர் ஒப்பீட்டை மேற்கொண்டால், எடியூரப்பா அரசுதான் முதலிடத்தில் இருக்கும் என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரே குறிப்பிட்டுள்ளார்' என்றார். சித்தராமையா அரசு என்பதற்கு பதிலாக எடியூரப்பா அரசு என்று அவர் வாய் தவறி கூறிவிட்டார். அப்போது உடனிருந்த மாநில பாஜக முன்னாள் தலைவர் பிரஹலாத் ஜோஷி, அமித் ஷாவிடம் அதனை சுட்டிக் காட்டினார். 

இதைத் தொடர்ந்து, சித்தராமையா அரசு ஊழலில் முதலிடத்தில் உள்ளது என்று அமித் ஷா திருத்திக் கூறினார்.

எனினும், அவர் வாய் தவறி கூறிய வார்த்தைகள், எடியூரப்பாவுக்கும் பாஜகவினருக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 'அமித் ஷா அளித்த பரிசால், கர்நாடகத் தேர்தலில் நமது பிரசாரம் அற்புதமாக தொடங்கியிருக்கிறது. எடியூரப்பா அரசுக்கே ஊழலில் முதலிடம் என்று அமித் ஷா கூறியிருக்கிறார். அது உண்மைதான்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் காங்கிரஸின் சமூக ஊடகப் பிரிவின் பொறுப்பாளர் திவ்யா ஸ்பந்தனா, சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 'யாருக்கு தெரியும், அமித் ஷாவும் உண்மையை பேசுவார் என்று. எடியூரப்பா அரசுக்கே ஊழலில் முதலிடம் என்ற உங்களது கருத்துக்கு நாங்கள் அனைவரும் உடன்படுகிறோம்' என்று தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.