இந்தியா

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.59 கோடி அபராதம் விதித்த ஆர்பிஐ: ஏன் தெரியுமா? 

PTI

மும்பை: தங்கள் கைவசமுள்ள முதிர்வு பத்திரங்கள் தொடர்பான தகவலை மறைத்த காரணத்தினால் ஐசிஐசிஐ வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.59 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

நாட்டிலுள்ள வங்கிகள் அனைத்தும் தங்களுக்கு நிதி முதலீடு திரட்டும் பொருட்டு பல்வேறு வகையான திட்டங்களின் கீழ் பத்திரங்களை வெளியிடுவது வழக்கம். அவ்வாறு 'முதிர்வடையும் வரை வைத்திருத்தல்' என்னும் ஹெச்.டி.எம் என்னும் முறையிலும் பத்திரங்கள் வெளியிடப்படும்.     

இத்தகைய பத்திரங்களை மேலாண்மை செய்வதற்கு என்று மத்திய வங்கியான ஆர்பிஐ பல்வேறு விதிமுறைகளை வகுத்திருக்கிறது. ஆனால் ஐசிஐசிஐ வங்கி அவ்வாறு தங்கள் கைவசம் உள்ள பத்திரங்கள் தொடர்பாக சரியான தகவல்களை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்கள் கைவசமுள்ள முதிர்வு பத்திரங்கள் தொடர்பான தகவலை மறைத்த காரணத்தினால் ஐசிஐசிஐ வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.59 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் எவ்வாறு ஐசிஐசிஐ வங்கி இந்த தவறைச் செய்தது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT